நெல்லை மாவட்டத்திற்கு ரூ.32 கோடி வறட்சி நிவாரண நிதி ஒதுக்கீடு

செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்து விட்டதால் வறட்சி மாவட்டமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்மைத்துறை அதிகாரிகள் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 42 ஆயிரம் விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு ரூ.32 கோடி ஒதுக்கி உள்ளது. அந்த பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், 42 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கும் விரைவாக காப்பீட்டு தொகை கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a Reply