Thursday, 14/11/2019 | 1:15 UTC+0

நெல்லை ஜில்லாவில் தில்லா ஒரு இளம் உதவி ஆய்வாளர்

Nellai Sub Inspector Sivaharan

நெல்லை VIPல நாம பாக்க போறது நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகில் உள்ள ஏர்வாடி காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி ஆய்வாளர் சிவஹரன். சொந்த ஊர் கன்னியாகுமரி. 2011 ஆம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். முதல் காவல்நிலையம் வீரவநல்லூர் பின்பு அங்கிருந்து நெல்லை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலக பணி. அங்கிருந்து தற்போது ஏர்வாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேர்மை , உண்மை என்ற சொல்லுக்கு உரியவராக வலம் வருகிறார் இந்த இளம் உதவி ஆய்வாளர்.
Nellai Sub Inspector Sivaharan

குற்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் , ஈடுபட்டவர்கள் இவரை கண்டால் நடுங்குகின்றனர். இதனால் குற்றங்கள் குறைந்திருக்கிறது என்பது போலீஸ் ரெக்கார்டில் எழுதப்பட்ட உண்மை. இவர் ஏர்வாடிக்கு வந்த பிறகு சக காவலர்களுக்கும் மரியாதை கூடியிருக்கிறது. மேலும் நியாயமான பிரச்சனைகளில் தைரியமாக இறங்கி வேலை செய்ய முடிகிறது. அதனால் ஏதாவது பிரச்சனை வந்தால் நம்ம உதவி ஆய்வாளர் நம்மளை விட்டு கொடுக்க மாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறுகின்றனர் சில காவலர்கள். ஏர்வாடி காவல்நிலையத்திற்கு சென்றால் கண்டிப்பாக நியாயம் கிடைக்கும் என்று நம்பி வருகின்றனர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பொதுமக்கள்.

இந்த காலத்தில் இவ்வளவு நேர்மையாக தைரியமாக ஒரு உதவி ஆய்வாளர் இருந்தால் அவருக்கு பிரச்சனைகள் வராமல் இருக்குமா . வருகிறது ஆனால் அதையும் தைரியமாக எதிர் கொண்டு எதிரிகளை வீழ்த்தி வருகிறார். ரெக்கமென்ட்டில் வருகின்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்கிறார். உண்மையான சம்பவத்திற்கு ஏழையாக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்வதை தனது முதல் கடமையாக நினைக்கிறார்.

பிறரின் புகழ்ச்சிக்கு மயங்காத இளம் சிங்கமாக உலா வரும் ஏர்வாடி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் சிவஹரன் அவர்களை நமது இணையதளத்தின் VIPயாக அடையாளப்படுத்திவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ