Tuesday, 24/4/2018 | 4:20 UTC+0

பார்வை இழந்தவர்களுக்கும் கல்வி ஒளி – லிட் த லைட்

Education help for blind people by lead the light

நாம் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளும் பல பல அனுபவங்கள் மற்றும் நபர்களை கடந்து சென்று கொண்டிருக்கிறோம் அவர்களில் பார்வையற்றோர்களும் ஒன்று. அவர்களை நம்மை போல் கடந்து செல்லாமல் அவர்கள் வாழ்க்கையிலும் ஒளி ஏற்றி வைக்க வேண்டும் என்ற முனைப்போடு போராடி வரும் அமைப்பு தான்

லிட் த லைட்

ஒரு இளைஞர் கூட்டம் அவர்களின் எண்ணத்தில் கல்வி ஆசை புதைந்ததை கண்டறிந்து தங்கள் வாழ்வில் பெரும் பகுதியை அவர்களுக்கானதாக மாற்றி அவர்களுக்கான ஒலிப்புத்தகம் உருவாக்குவது அவர்களுக்கு துணையாக தேர்வெழுத செல்வது, அவர்களுக்கு கல்வி பயிற்சி அளிப்பதுன்னு வேலை பாக்குறாங்க. இந்த குழுவில் பரத், ராம்குமார்,ரவி,அத்யன்,லீலாவதி, சந்திரா,வரலட்சுமி,ரதி ,கார்த்திகேயன் என இவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவர்கள் பணியில் முக்கிய பணியாக ஒலி புத்தகங்களை உருவாக்கும் குழுவில் கடையநல்லூரை சார்ந்த கார்த்திக்கும் இருக்காரு. இவர்கள் தயாரிக்கும் இந்த ஒலி புத்தகப்பணிக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உங்களால் முடிந்த உதவியை 99421 50363(கார்த்திக்கின் மொபைல் எண்) என்ற எண்ணுக்கு கால் செய்து உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்

உதவி செய்ய முடியவில்லை என்று வருந்துபவர்கள் கவலை கொள்ளாமல் இந்த பதிவை பல பேருக்கு கொண்டு செல்லுங்கள்.

நன்றி : Our Kadayanallur & Tenkasi Times

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ