நெல்லை பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி

செய்திகள், வேலைவாய்ப்புகள்

மத்திய அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவை இணைந்து, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் அலுவலகத்தில் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது.

தொலை தொடர்பு துறையில் உள்ள கட்டமைப்புகளை அறிந்து கொண்டு, அவற்றில் ஏற்படும் பழுதுகளை நீங்குவதற்காக இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பு வருகிற 27–ந் தேதி தொடங்கி 6 வாரம் நடைபெறும். மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் ரூ.100 வீதம் பயணப்படி வழங்கப்படும்.

தகுதி உள்ள இளைஞர்கள் http://rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணையதள முகவரில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மறுபடியும் பதிவு செய்ய தேவை இல்லை. பயிற்சியில் சேருவதற்கான நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு வருகிற 27–ந் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள் அசல் சான்றிதழ்களோடு, பதிவு செய்த விண்ணப்பத்தின் 2 நகல்கள், ஆதார் அட்டை 2 நகல்கள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462–2500976 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply