Monday, 21/1/2019 | 4:00 UTC+0

பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு பயிற்சி வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது.

மத்திய அரசு நிறுவனமான BSNL மற்றும் தமிழ்நாடு அரசின் திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள BSNL பொது மேலாளர் அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கான இலவச பயிற்சியை வழங்கி வருகிறது.

பிராட்பேண்ட் தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு இருக்கிறது. , 6 வாரம் நடைபெற உள்ள இந்த வேலைவாய்ப்பு முகாமிற்கு நவீன தொழில் நுட்பம் தொடர்பாக வேலை தேடும் இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு கலந்து கொள்ளலாம். இந்த பயிற்சி வகுப்பு வருகிற 15–ந் தேதி தொடங்குகிறது. பயிற்சி பெறுபவர்களுக்கு தினமும் ரூ.100 வீதம் பயணப்படி வழங்கப்படும்.

தகுதி உள்ள இளைஞர்கள் http://rgmttc.bsnl.co.in/jobportal என்ற இணையதள முகவரியில்  பதிவு செய்த பின் வருகிற 15–ந் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும்.

விருப்பம் உள்ளவர்கள் அசல் சான்றிதழ்களோடு, பதிவு செய்த விண்ணப்பத்தின் 2 நகல்களோடு ஆதார் அட்டையின் 2 நகல்களை கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462–2500976 என்ற தொலை பேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வேலை தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என NHLன் சார்பாக கேட்டு கொள்கிறோம் மேலும் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் மறுபடியும் பதிவு செய்ய தேவை இல்லை

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ