மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக்கு இணையதளம் மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

செய்திகள்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் கூறுகையில்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுக்கு இனி மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்யலாம். இதற்கு மாணவர்கள் தங்களது பதிவு எண், மொபைல் எண், இ.மெயில் ஐ.டி. ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.இதன் மூலம் மாணவர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிந்து விடும்

தேர்வு எழுத விரும்புபவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து விண்ணப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேர்வுக்கான பணத்தை நெட் பேங்கிங் மூலம் செலுத்தலாம். மேலும் எந்த பாடங்கள் எழுத வேண்டும், எத்தனை அரியர் உள்ளது? என்பன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டர் தேர்வு எழுதும்போதும் மாணவர்கள் அவர்கள் வழக்கமான செமஸ்டர் பாடங்களுடன், அரியர் பாடங்களையும் சேர்த்து எழுத வேண்டும். எத்தனை அரியர் உள்ளதோ அனைத்தையும் எழுத வேண்டும்.

இது நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட 10 மனோ கல்லூரிகள் உள்பட மொத்தம் 83 கல்லூரிகளுக்கு பொருந்தும் என கூறினார்.

இணையதளம் மூலம் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் முறையை தமிழ்நாட்டிலே முதல் முறையாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துவது மிகவும் பெருமையான விஷயம் தான்.

வாழ்த்துக்கள்

Leave a Reply