Mini marathon competition in papanasam

பாபநாசத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி

செய்திகள்

திருவள்ளுவர் கல்லூரி தவத்திரு குன்றக்குடி அடிகளார் விளையாட்டு கழகம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று பாபநாசத்தில் நடந்தது. மாணவர்களுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 5 கி.மீ தூரமும் நடத்தப்பட்டது. போட்டியை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

போட்டியின் இறுதியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கல்லூரி சுயநிதி பிரிவு இயக்குனர் கார்த்திகேயன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் அழகப்பன் தலைமை தாங்கினார். வள்ளிமயில் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் வேம்பு, போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

மாணவர்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
வீரவநல்லூர் புனித ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவன் ரூபன் டேனியல் – முதல் பரிசு
திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி மாணவன் ராஜப்பெருமாள் – இரண்டாவது பரிசு
வீரவநல்லூர் கல்லூரி மாணவன் – மூன்றாவது பரிசு
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி மாணவன் செல்வகுமார்- நான்காவது பரிசு

மாணவிகள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் விவரம்
நெல்லை ஸ்போர்ட்ஸ் அகாடமி முத்துமாரி – முதல் பரிசு
வீரவநல்லூர் புனித ஜான்ஸ் உடற்கல்வியியல் கல்லூரி மாணவி – இரண்டாவது பரிசு
பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி மாணவி சங்கீதா – மூன்றாவது பரிசு

Leave a Reply