Nellai District | Nellai Help Line

நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்திற்கு நெல்லை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க குழுவினரின் திடீர் விசிட்

செய்திகள்

நேற்று மாலை நெல்லை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க குழுவினர், நெல்லை சந்திப்பு இரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய சென்றிருந்தனர். அவர்களின் ஆய்வுகளில் சில

  • முதல் பிளாட்பாரத்தில் கட்டண கழிப்பிடத்தின் வெளியே கட்டண அறிவிப்பு பலகை இல்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை பூட்டுடன் சங்கிலி பினைத்து பூட்டப்பட்டிருந்தது
  • இரண்டாவது மற்றும் மூன்றாவது பிளாட்பாரத்திற்கான கழிவறை சங்கிலியால் பிணைத்து பூட்டப்பட்டிருந்தது , அங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை சங்கிலியால் பிணைத்து பூட்டப்பட்டிருந்தது.
  • நான்காம், ஐந்தாம் பிளாட்பாரங்களில் கழிவறையே இல்லை
  • அனைத்து பிளாட்பாரங்களிலும் மிகவும் தூசு மண்டிய நிலையில் மின் விளக்கைப்போல் ஏதோ இருந்தது, அருகில் சென்று உற்று நோக்கிய பின்பு தான் தெரிந்தது , அது கண்காணிப்பு கேமரா ! ஐயோ பாவம் அதை கண்காணிக்க யாரும் இல்லை போலும்!
  • பிளாட்பாரங்களுக்கு செல்ல பயன்படுத்தும் பாலத்தில் முழுவதுமாக மின் விளக்குகளே எரியவில்லை

மேற்கண்ட அனைத்து குறைகளையும் அதிகாரிகள் களைய வேண்டும் என்பதே நெல்லை மாவட்ட சட்ட பஞ்சாயத்து இயக்க குழுவினர் மற்றும் மக்களின் விருப்பம்.

அதிகாரிகள் கண்டு கொள்வார்களா?

பொறுத்திருந்து பார்ப்போம்

 

Leave a Reply