Nellai - Tenkasi Route Bus Not Following Rules

நெல்லை – தென்காசி வழித்தடத்தில் விதிமுறைகளை மீறி பயணிகளை வாட்டி வதைக்கும் அரசு பஸ்கள்

செய்திகள்

விதிமுறைகளை மீறி பயணிகளை வாட்டி வதைக்கும் அரசு பஸ்களை தன்னிச்சையாக இயக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட பயணிகள் நலச்சங்க தலைவர் மணிவண்ணன், கூறியபோது:

நெல்லை அரசு போக்குவரத்து கழகம் தென்காசி பணிமனையில் இருந்து தென்காசி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களை அதிகாரிகள் அடிக்கடி தன்னிச்சை நடவடிக்கையாக வசூலுக்காக பெயர்களை மாற்றி இயக்கி வருகின்றனர். 21:6:16 அன்று இரவு 7.50 மணிக்கு நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசி பணிமனையை சேர்ந்த TN 72 எண் 1948 சாதாரண கட்டண பஸ் நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து தென்காசிக்கு இயக்க தயார் நிலையில் நின்றது.

அதில் வழித்தட ஊர்களான ஆலங்குளம், சாலை புதூர், பாவூர்சத்திரம், அடைக்கலபட்டணம், மகிழ்வண்ணநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பயணிகள் ஏறியமர்ந்தனர். இதைதொடர்ந்து டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோர் பஸ்சில் ஏறியதும் தென்காசி பயணிகள் மட்டும் இருக்கவும், பிற வழித்தடங்களில் பஸ் நிற்காது. தற்போது 1 to 1 பஸ்சாக இயக்க அதிகாகரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி பிற ஊரை சேர்ந்த பயணிகள் கீழே இறங்கும்படி தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகளுக்கும் நடனத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்பின்னர் தென்காசி செல்லும் பயணிகள் மட்டும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பின்னர் சொற்ப பயணிகளுடன் பஸ் புறப்பட்டு சென்றது. ஆலங்குளம், சாலை புதூர், பாவூர்சத்திரம் செல்ல வேண்டிய பயணிகள் வெகுநேரம் காத்திருந்து சாதாரண கட்டண பஸ்சை பிடித்து சென்றனர். இதனால் காலநேரம் விரையமாகியது.

Nellai - Tenkasi Route Bus Not Following Rules

குறிப்பிட்ட நேரத்தில் SFSக இயக்க வேண்டிய பஸ்சினை, அதிகாரிகள் பயணிகளை சிரமத்திற்குள்ளாகி 1 to 1 பஸ்சாக பல முறை இயக்கிவருகின்றனர். இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இரவு 7.50 மணி பஸ்சிற்கு பின் 9 மணிக்கு மேல் தென்காசிக்கு இயக்கப்படும் 1 to 1 பஸ்களில் சாலைபுதூர், மகிழ்வண்ணநாதபுரம், அடைக்கலப்பட்டணம் செல்லும் பயணிகள், தென்காசி வரை செல்லும் பஸ்சில் கூடுதல் கட்டணமாக ரூ.38 செலுத்தி வழித்தட ஊர்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே பயணிகளை வாட்டி வதைக்கும் இது போன்ற அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Leave a Reply