Thursday, 18/10/2018 | 5:55 UTC+0
  • Wrong treatment claiming teenage girl dead in moolakaraipatti
    தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததால் பொதுமக்கள் போராட்டம்

    மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 50). இவருடைய மகள் உஷாராணி (வயது 17). இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 18–ந் தேதி இரவு உஷாராணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவரை மூலக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். பின்னர் மதியம் திடீரென உஷாராணி உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து,

    Read more
  • அம்பை கோர்ட்டுக்கு பாதுகாப்பு கோரி மனு கொடுத்த பள்ளிச்சீருடையில் வந்த சிறுவர்கள்

    ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு அமர்நாத், சீனிவாசன் என்ற 2 மகன்களும், மகேசுவரி என்ற மகளும் உள்ளனர். அமர்நாத் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பும், சீனிவாசன் 6–ம் வகுப்பும், மகேசுவரி 5–ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கணவன்–மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தந்தை முருகனுடன் வசித்து வருகிறார்கள். நேற்று அமர்நாத், சீனிவாசன்,

    Read more
  • Sivanthipuram people protest against the opening of the tasmack
    சிவந்திபுரத்தில் டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

    விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பாவுக்கு தெற்குப்பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையில் தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. அங்கு டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருப்பதாக இருந்தது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ள பாதையில் திரண்டு, டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர். இதுகுறித்து தகவல்

    Read more
  • குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது

    குற்றாலத்தில் நேற்று சீசன் தொடங்கியுள்ளது. காலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியத்திற்கு மேல் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மலை பகுதியிலும் மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவியில் ஆக்ரோ‌ஷமாக தண்ணீர் கொட்டியது. இதனை அடுத்து போலீசார் குளிப்பதற்கு தடை விதித்தனர். சிறிது நேரத்தில் மெயின் அருவியிலும் தண்ணீர் தடுப்பை தாண்டி விழுந்ததால் அங்கும் குளிக்க தடை விதித்தனர். காலை 4 மணிக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார்

    Read more
  • நெல்லையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

    நெல்லை டவுன் பாட்டப்பத்து, தேவிபுரம் உள்ளிட்ட பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, மேலும் வினியோகம் செய்யப்படும் குடிநீரும் சாக்கடை கலந்து வருவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. இது தொடர்பாக அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் நெல்லை டவுன் கல்லணை மேல்நிலைப்பள்ளி முன்பு அந்த பகுதி மக்கள் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கலங்கலான தண்ணீரை பாட்டிலில் அடைத்து கையில் வைத்து இருந்தனர்.

    Read more

வீடியோ