கடையநல்லூர் அருகே விபத்தில் பாலிடெக்னிக் மாணவர் பலி

Polytechnic student dead in accident | Kadayanallur | Nellai Help Line

கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் மங்கம்மாள் சாலையை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் ராஜா என்ற ராம்ராஜ் (வயது 18). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மேலக்கடையநல்லூரில் இவருடைய சகோதரி வீடு உள்ளது. அங்கு நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது நண்பர் கண்ணன் என்பவருடன் மோட்டர் சைக்கிளில் புறப்பட்டார்.

கடையநல்லூர் அட்டைக்குளம் மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்த போது மேலக்கடையநல்லூரை சேர்ந்த சிவா (31) என்பவர் மற்றொரு மோட்டர் சைக்கிளில் எதிரே வந்த போது எதிர்பாராதவிதமாக 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கண்ணன், சிவா ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து உடனடியாக கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜா உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *