
தென்காசியில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தென்காசி நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வந்த 6 டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. மேலும் ஒரு தனியார் ஓட்டலில் இயங்கி வந்த மதுக்கூடமும் மூடப்பட்டது. தற்போது தென்காசி நகரில் டாஸ்மாக் கடைகள் எதுவும் இல்லை.
இதனால் தென்காசியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் அருகில் ஒரு டாஸ்மாக் மதுபான கடை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆய்க்குடி சாலையில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சுமார் அரை மணி நேரம் நடந்தது. பின்னர் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் சங்கரலிங்கத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.