குருவன்கோட்டையில் நகை பணம் கொள்ளை

செய்திகள்

ஆலங்குளம் அருகே உள்ள  குருவன்கோட்டை பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் என்பவர் ஆலங்குளம் மெயின்ரோட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்த ரூ.1½ லட்சம் மற்றும் 41 கிராம் நகை ஆகியவற்றை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சரவணன் எப்போதும் எந்த அறையில் தூங்குகிறாரோ அந்த அறையில் தான் வீட்டின் பீரோ சாவி உள்ளிட்ட சாவிகளை வைப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவும் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கும் போது, வீட்டின் தரைப்பகுதி அறையின் சாவி மற்றும் பீரோ சாவி ஆகியவற்றை தான் தூங்கிய மாடி அறையில் உள்ள ஒரு ஆணியில் தொங்க விட்டு உள்ளார் மேலும் இரவுநேரம் அதிக புழுக்கமாக இருந்ததால் காற்றுக்காக கதவை திறந்து வைத்து சரவணன் தூங்கி உள்ளார்.

இதை பயன்படுத்தி அறைக்குள் புகுந்த மர்மநபர், அங்கு ஆணியில் தொங்கவிடப்பட்டு இருந்த சாவியை எடுத்து பணத்தை கொள்ளையடித்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.

கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Leave a Reply