சேரன்மகாதேவி இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணுக்கு ஒரு ராயல் சலுய்ட்

Cheranmahadevi IAS Officer Vishnu

நெல்லை VIPல நாம பாக்க போறது சேரன்மகாதேவியில் சப்–கலெக்டராக பணியாற்றும் இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி விஷ்ணு

நெல்லை மாவட்டம் மந்தியூர் ஊராட்சியில் உள்ள ஒரு குடியிருப்பில் கடந்த சில நாட்களாக “விஷ்ணு நகர்”’ என்று ஒரு பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த குடியிருப்புக்கு இவ்வளவு நாட்களும் இல்லாத வகையில் புதிதாக ஒரு பெயர் சூட்டப்பட்டுள்ளது என்று கேட்டால், அந்த குடியிருப்பு மக்கள் உணர்ச்சி பூர்வமாக சில தகவல்களை கூறுகிறார்கள்.

Cheranmahadevi IAS Officer Vishnu

எங்கள் குடியிருப்பில் இதுவரையில் மின்சாரம், குடிநீர் வசதியில்லாமல் இருந்தது. தண்ணீர் வேண்டுமென்றால் நீண்டதூரம் சென்றுதான் எங்கள் பெண்கள் தண்ணீர் எடுத்துக் கொண்டு வர வேண்டும். நாங்களும் 20 ஆண்டுகளாக வார்டு கவுன்சிலரில் இருந்து முதலமைச்சரின் தனிப்பிரிவு வரைக்கும் மனுக்களை கொடுத்துவந்தோம். ஆனால், எந்தப்பயனும் இல்லை.

இந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விஷ்ணு என்ற இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சேரன்மகாதேவியில் சப்–கலெக்டராக பணியில் சேர்ந்தார். அவர் இந்த குடியிருப்பை பார்வையிட வந்தநேரத்தில், அங்குள்ள பெண்களும், மாணவர்களும் எங்களுக்கு மின்சாரம், குடிநீர் வசதி இல்லை என்று முறையிட்டனர். உடனடியாக அந்த இளம் அதிகாரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உடனடியாக மின்சாரம் வழங்கவும், குடிநீர் வழங்க பைப்லைன் போடுவதற்கும் நடவடிக்கை எடுத்தார். இதனால் மனம் மகிழ்ந்த மக்கள், அந்த குடியிருப்புக்கு ‘‘விஷ்ணு நகர்’’ என்று அந்த அதிகாரி பெயரையே சூட்டியுள்ளனர்.

ஒரு அதிகாரி நினைத்தால் ஆண்டாண்டு காலமாக மக்களின் நிறைவேற்றப்படாத எந்த அடிப்படைத் தேவையையும் நிறைவேற்றமுடியும் என்று ஒரு இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரி நிறைவேற்றிக்காட்டியிருக்கிறார்.

இது போன்ற அதிகாரிகளால் தான் மழை பெய்கிறது போல…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *