குற்றாலத்தில் சீசன் களை கட்டுகிறது

செய்திகள்

குற்றாலத்தில் நேற்று சீசன் தொடங்கியுள்ளது. காலையில் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மதியத்திற்கு மேல் சாரல் மழை தொடர்ந்து பெய்தது. மலை பகுதியிலும் மழை பெய்ததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ஐந்தருவியில் ஆக்ரோ‌ஷமாக தண்ணீர் கொட்டியது.

இதனை அடுத்து போலீசார் குளிப்பதற்கு தடை விதித்தனர். சிறிது நேரத்தில் மெயின் அருவியிலும் தண்ணீர் தடுப்பை தாண்டி விழுந்ததால் அங்கும் குளிக்க தடை விதித்தனர். காலை 4 மணிக்கு மேல் வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்தனர். தற்போதைய சூழலில் சீசன் களை கட்டி வருகிறது.

நேற்று காலையில் இருந்தே சாரல் மழை பன்னீர் தெளித்தாற்போல் தூறலும், இதமான வெயிலும், குளிர்ந்த காற்று வீசியது. இந்த தகவல் அறிந்து சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வரத் தொடங்கினர். மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி ஆகிய அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply