நெல்லை கோவில்களில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

செய்திகள், நிகழ்ச்சிகள்

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று தொடங்கியது. காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்று சிறப்பு பூஜைகளுக்கு பிறகு தீப ஆராதனை நடைபெற்றது. தினமும் காலை மாலை சிறப்பு பூஜைகள் மற்றும் வீதி உலா நடக்கவிருக்கின்றன

நிகழ்ச்சிகள்

  • 8–ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
  • 9–ம் தேதி காலை 8 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. இதில் 4 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன.
  • 11–ம் தேதி காலை 9.30 மணிக்கும், மாலை 7 மணிக்கும் நடராஜ மூர்த்திக்கு தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
  • 12–ம் தேதி சித்திர சபையில் நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனை நடக்கிறது.
  • 14–ம் தேதி சித்திரை விசு தீர்த்தவாரி நடக்கிறது.

மேலும் அம்பை மற்றும் கல்லிடைக்குறிச்சி அகஸ்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி திருவிழா கொடியேற்றம் நடந்தது.

Leave a Reply