Tuesday, 24/4/2018 | 4:34 UTC+0

கிணறு தோண்டும் போது மண் சரிந்து விழுந்து தொழிலாளர்கள் பலி

Two employees died during the well drilling

முக்கூடல் அருகே உள்ள துப்பாகுடியை சேர்ந்தவர் ராமநாதன். இவர் என்ஜினீயராக உள்ளார். இவருக்கு சொந்தமான தோட்டம் துப்பாகுடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட ராவுத்தபேரியில் வடக்குவாசெல்வி அம்மன் கோவிலுக்கு பின்புறம் உள்ளது. இந்த தோட்டத்தில் புதிதாக கிணறு தோண்டும் பணியில் ஈடுபட்ட ஆறுமுகம் மற்றும் தங்கராஜ் மீது மண் சரிந்து விழுந்து அமுக்கியது. இதில் அவர்கள் மூச்சு திணறி உயிருக்கு போராடினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள், மண்ணுக்கு அடியில் சிக்கிய தங்கராஜ், ஆறுமுகம் இருவரையும் மீட்டு ஆட்டோவில் ஏற்றி அம்பாசமுத்திரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் துரைசாமி, மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ