Wednesday, 12/12/2018 | 3:11 UTC+0

தவறான சிகிச்சையால் இளம்பெண் இறந்ததால் பொதுமக்கள் போராட்டம்

Wrong treatment claiming teenage girl dead in moolakaraipatti

மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கல்லத்தி பகுதியை சேர்ந்தவர் மனோகர் (வயது 50). இவருடைய மகள் உஷாராணி (வயது 17). இவர் மூலைக்கரைப்பட்டியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 18–ந் தேதி இரவு உஷாராணிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து அவரை மூலக்கரைப்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். பின்னர் மதியம் திடீரென உஷாராணி உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, தனது மகள் சாவுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தவறான சிகிச்சை அளித்ததே காரணம் என்று கூறி மூலக்கரைப்பட்டி போலீசில் அவரது தந்தை புகார் செய்தார். உடனே போலீசார் உஷாராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் உஷாராணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட 200 பேர் நேற்று காலை மூலைக்கரைப்பட்டியில் உள்ள அந்த ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நாங்குநேரி உதவி போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், நாங்குநேரி இன்ஸ்பெக்டர் சுரேஷ் பெலிக்ஸ் பீட்டர், வடக்கு விஜயநாராயணம் இன்ஸ்பெக்டர் வெர்ஜின் சேவியோ, சப்–இன்ஸ்பெக்டர்கள் பரமேசுவரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் புறப்பட்டுச் சென்றனர்.

About

POST YOUR COMMENTS

Your email address will not be published. Required fields are marked *

வீடியோ