கடையநல்லூரில் பங்குனி கொடைவிழா கோலாகல கொண்டாட்டம்

செய்திகள், நிகழ்ச்சிகள்

கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி பகவதி அம்மன் மற்றும் உச்சிமாகாளி அம்மன் கோவில் பங்குனி கொடைவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியதை முன்னிட்டு நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

உச்சிமாகாளி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜையுடன் கொடிபட்டம் முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் எடுத்து வந்தனர். அப்போது பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழா நாட்களில் தினமும் இரவில் அம்மன் வீதி உலா நடந்து வருகிறது.

நிகழ்ச்சிகள்:

  • 2-ந் தேதி மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை
  • 3-ந் தேதி மாலையில் பால்குடம் எடுத்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு உச்சிமாகாளி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுகிறார்.
  • 4-ந் தேதி மாலை 5 மணிக்கு பக்தர்கள் முளைப்பாரி எடுத்தல், இரவு 10 மணிக்கு பகவதி அம்மன் ஊர் விளையாடும் நிகழ்ச்சி

Leave a Reply